மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி
Vaiko
Chennai
By Sumathi
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இவர் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலன் பாதிக்கப்பட்டு அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் திடீரென வைகோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் கால் இடறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
என்ன பிரச்சனை?
இதனால் விரலில் காயம் ஏற்பட்டதாகவும், இதற்காக சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து மருத்துவமனை தரப்பிலோ,
வைகோ தரப்பிலோ அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Viral Video: மிகப்பெரிய மீனை அசால்ட்டாக பிடித்துச் செல்லும் கழுகு.... சிலிர்க்க வைக்கும் காட்சி Manithan
