தனது சொந்த நிதியில் நடைபாதை அமைத்து கொடுத்த அமைச்சர்!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், மதியம்பட்டி பகுதியில் அமைந்துள்ள முதியோர் காப்பகத்தில், சுமார் 50-க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ளனனர்.
அமைச்சர் மதிவேந்தன்
இந்த முதியோர் இல்லத்தில் முறையான நடை பாதை இல்லாமல் மண் பாதை மட்டுமே இருந்து வந்தது. இதனால் மழைக்காலங்களில் சேறு சகதிகள் ஏற்பட்டு நடக்க முடியாத சூழல் நிலவி வந்தது.
பல்வேறு சமயங்களில் முதியோர் வழுக்கி விழுந்து விழுந்தனர். இதனை அறிந்த மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் மதிவேந்தன், முதியோரின் நலம் கருதி அந்த இடத்தில் தனது சொந்த நிதியில் பேவர் பிளாக் மூலம் நடைபாதை அமைத்து தந்துள்ளார்.
சொந்த நிதியில் நடைபாதை
இதனை திறந்து வைத்து அங்கு வசிக்கும் முதியோர்களுடன் கலந்துரையாடி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அங்கு வசிக்கும் முதியோர்கள் அமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றியை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் வெண்ணந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் RMதுரைசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்