அடிச்சி நொறுக்குவேன்; சம்பவம் செய்த வைபவ் - மொட்டை மாடி பயிற்சி வீடியோ வைரல்
வைபவ் சூர்யவன்ஷி மொட்டை மாடியில் பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதியது.
ராஜஸ்தான் அணியின், இளம் வீரர்கள் வைபவ், ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
வீடியோ வைரல்
விவசாயி மகன் வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி(14) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.1 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். 13 வயதில் ஐபிஎல் ஒப்பந்தம் பெற்ற மிக இளம் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
A 10 yr old Vaibhav Sooryavanshi practicing on his terrace during the lockdown in 2021
— Vinesh Prabhu (@vlp1994) April 28, 2025
4 years later, becomes the second fastest IPL centurion ❤️🙏#IPL2025 pic.twitter.com/fGdNMGyskA
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 17 பந்துகளில் அரைசதமும், 35 பந்துகளில் சதமும் விளாசினார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் விளாசிய இந்தியர், அதிவேகமாக சதம் விளாசியவர், குறைந்த வயதில் ஆட்டநாயகன் விருதை வென்றவர் போன்ற சாதனைகளை படைத்துள்ளார்.
இந்நிலையில் வைபவ் தனது 10 வயது இருக்கும் பொழுது அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது தன் வீட்டு மொட்டை மாடியில் பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.