மகள் என்று சொல்லிட்டு திருமணம் பண்ணிட்டாரு - பிரபல இயக்குநர் குறித்து வடிவுக்கரசி பளீச்
பாலுமகேந்திரா பற்றி வடிவுக்கரசி பல தகவல்கள் பகிர்ந்துள்ளார்.
பாலுமகேந்திரா
முன்னணி இயக்குநராகவும் ஒளிப்பதிவாளாராகவும் வலம் வந்தவர் பாலு மகேந்திரா. அழியாத கோலங்கள், மூடு பனி, மூன்றாம் பிறை உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.
முதலில் அகிலா என்பவரை திருமணம் செய்துகொண்டார்; பிறகு நடிகை ஷோபாவை திருமணம் செய்துகொண்டார். அதனையடுத்து நடிகை மௌனிகாவுடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்களில் அகிலா - பாலுமகேந்திராவுக்கு ஒரு மகன் உள்ளார்.
வடிவுக்கரசி அதிர்ச்சி
இந்நிலையில் நடிகை வடிவுக்கரசி பாலுமகேந்திரா குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், "எனக்கு சினிமாவில் ஷோபாதான் முதல் தோழி. அவர் கேகே நகரில் வசித்தபோது அடிக்கடி சந்திப்பேன். ஏணிப்படிகள் படத்தின்போது நெருக்கமானோம். பசி படத்துக்கு அவர் தேசிய விருது பெற்றார்.
எனவே அவருக்கு வாழ்த்து சொல்ல சென்றபோது பாலுமகேந்திராவை ஷோபா திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. அது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
ஏனெனில் பாலுமகேந்திரா ஒருமுறை ஷோபாவுக்கு என் அன்பு மகளே என்று எழுதி கிஃப்ட் கொடுத்தார். மகள் மாதிரி பழகிக்கொண்டு அவளையே திருமணம் செய்தது அதிர்ச்சியை கொடுத்தது" எனத் தெரிவித்துள்ளார்.