ஸ்ரீதேவியை வற்புறுத்திய இயக்குநர்; காப்பாற்ற போராடிய கமல் - பகீர் கிளப்பிய பிரபலம்!
பிரபலம் ஒருவர் பாலுமகேந்திரா குறித்து பேசியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலுமகேந்திரா
பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பாலுமகேந்திரா குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதன்படி, பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர்,
"பாலுமகேந்திராவைவிடவும் மோசமான பெண் பித்தர் வேறு யாரும் இல்லை. அவர் ஒரு மட்டமான ஆள். அவரது இயக்கத்தில் நடிக்கும் நடிகைகள் திரைப்படம் முடிவதற்குள் பாலியல் ரீதியாக துன்பப்படுத்தப்படுவார்கள். அவர்களை மனைவியாக்கிக்கொள்ளவும் முயல்வார். அதற்கு உதாரணமாக ஷோபா, மோனிகாவை சொல்லலாம்.
மேலும் 23 வயது பெண் ஒருவரை வீட்டிலிருந்து பிரித்து குடும்பம் நடத்தினார். மோனிகாவுடன் லிவிங் வாழ்க்கை வாழ்ந்து திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்தார். இவர் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்துகிறார் என்று தெரிந்துதான் ஷோபா தற்கொலை செய்துகொண்டார்.
அதிர்ச்சி தகவல்
ஷோபாவின் மரணத்துக்கு காரணமான பாலுமகேந்திராவை எம்ஜிஆர்தான் காப்பாற்றினார். பாலுமகேந்திரா ஒரு சைக்கோ. அதேபோல்தான் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த பாலாவும் ஒரு சைக்கோ. பாலுமகேந்திராவிடமிருந்து ஸ்ரீதேவியை கமல் ஹாசன் காப்பாற்றினார்.
பாலுவின் படத்தில் நடிக்கமாட்டேன் என்று ஸ்ரீதேவி கூறியும் வற்புறுத்தி நடிக்க வைத்தார் பாலுமகேந்திரா. பல முறை அவரிடமிருந்து காப்பாற்ற கமல் ஹாசன் போராடியிருக்கிறார். ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா, ஷோபா, மோனிகா, ரெஸினா, ரேவதி போன்ற பெண்கள் பாலுமகேந்திராவின் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு அதன் பிறகு அவருடன் நடிக்காமல் போனார்கள்.
அதற்கு பாலியல் ரீதியான பயம்தான் காரணம். தங்களது பெண்மையை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் படாத பாடு பட்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.