ஒரே கன்னி வெடியா இருக்கே..தொடர் விமர்சனங்களுக்கு வடிவேலு கொடுத்த நச் பதில்!
தன் மீது எழுந்த எதிர்மறை விமர்சனங்கள் குறித்து நடிகர் வடிவேலு பதிலடி கொடுத்துள்ளார்.
வடிவேலு
தமிழ் சினிமாவில் தன்னுடைய உடல்மொழியாலும், நகைச்சுவையாலும் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றவர் வைகை புயல் வடிவேலு. நகைச்சுவை நடிகராக கோடி கட்டி பறந்த இவர், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அதன் பிறகு சில ஆண்டு காலம் நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க முடியாமல் இருந்தார்.
‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் வழியே திரையில் கம்பேக் கொடுத்தார். இந்நிலையில், ‘மாமன்னன்’ படம் வடிவேலுவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. இவர் ரீ-எண்ட்ரியின் போது நிறைய எதிர்மறை விமர்சனங்கள் வெளியானது.தற்போது அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் தக்க பதிலடி கொடுத்துளார்.
அண்மையில்.டாப் குக்கு டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியின் நடுவரான வெங்கடேஷ் பட் அவரிடம் திரை அனுபவம் குறித்து கேட்டுள்ளார்.
நச் பதில்
அதற்கு பதிலளித்த வடிவேலு, “என்னுடைய சினிமா வாழ்க்கையில் நான் தெய்வமாக மதிப்பது ராஜ்கிரண் அய்யா மற்றும் கமல் சாரை தான். ராஜ்கிரண் அய்யா தான் என் திறமையைக் கண்டுபிடித்து வாய்ப்புக் கொடுத்தவர். சினிமாவில் நல்லதை விட கெட்டது அதிகம் இருக்கும். இது பற்றி கமல்சாரிடம் ஒருமுறை கேட்டேன். ‘கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடியாக இருக்கிறதே!’ என்றேன்.
அதற்கு அவர், ‘அதெல்லாம் நிறைய வரும். அதையெல்லாம் தாண்டி நீ நடிச்சு மேலே வா’ என்றார். நான் திரும்ப நடிக்க வந்த போது, என்னை விமர்சனம் செஞ்ச யாரையும் இப்போ காணோம். தொழிலை நேசிச்சா எங்கேயும் தோற்க மாட்டோம். ஃபஹத் ஃபாசிலோட ‘மாரீசன்’ படத்துல நடிச்சிருக்கேன். இதுக்காக நிச்சயம் அவருக்கு விருது கிடைக்கும்” என்று பகிர்ந்துள்ளார்.