சிம்புவை தொடர்ந்து..நடிகர் வெங்கல் ராவுக்கு மருத்துவ உதவி செய்த வடிவேலு!

Tamil Cinema Vadivelu
By Swetha Jun 28, 2024 08:30 PM GMT
Report

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்க்கு வடிவேலு நிதியுதவி வழங்கியுள்ளனர்.

வெங்கல் ராவு

ஆந்திர மாநிலம் விஜயவாடா பக்கம் புனாதிபாடு கிராமத்தில் பிறந்தவர் நடிகர் வெங்கல் ராவ் . சினிமாவில் ஃபைட்டராகத் தன் பயணத்தை தொடங்கிய வெங்கல் ராவ், சண்டைக் காட்சிகளின்போது விபத்து ஏற்பட்டு கால்முட்டி, தோள்பட்டையில் அடிப்பட்ட காரணத்தினால் நடிகராக மாறியவர்.

சிம்புவை தொடர்ந்து..நடிகர் வெங்கல் ராவுக்கு மருத்துவ உதவி செய்த வடிவேலு! | Vadivelu Helps Vengal Rao For Recovery

'பணக்காரன்', 'ராஜாதி ராஜா' கால ரஜினி, அமிதாப், தர்மேந்திரா உள்பட பலருக்கும் டூப் போட்டவர் வெங்கல் ராவ். இருப்பினும் வடிவேலுடன் சேர்ந்து தோன்றிய காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வடிவேலு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பல நடிகர்களில் வெங்கல் ராவ்வும் ஒருவர்.

வடிவேலுவுடன் கிசுகிசு - அப்படி தான் வாய்ப்பு வாங்கினார் - அம்பிகாவின் சோகம்

வடிவேலுவுடன் கிசுகிசு - அப்படி தான் வாய்ப்பு வாங்கினார் - அம்பிகாவின் சோகம்

உதவிய வடிவேலு

கடந்த ஆண்டு இவருக்கு சிறுநீரகம் செயலிழந்து, வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், தற்போது ஒரு கை, ஒரு கால் செயலிழந்து விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனக்கு சினிமா கலைஞர்கள் நிதியுதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

சிம்புவை தொடர்ந்து..நடிகர் வெங்கல் ராவுக்கு மருத்துவ உதவி செய்த வடிவேலு! | Vadivelu Helps Vengal Rao For Recovery

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. நடிகர் சிம்பு 2 லட்சம் ரூபாய், ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி செய்தார். அதேபோல நடிகர் பாலா இந்த வீடியோவை பார்த்ததும் உடனடியாக அவருக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி செய்ததாக வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வரிசையில், நடிகர் வைகை புயல் வடிவேல் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.