பக்கவாதத்தால் தவிக்கும் வெங்கல் ராவ் - அள்ளிக்கொடுத்த வடிவேலு...எவ்வளவு தெரியுமா?

Tamil Cinema Vadivelu
By Karthick Jun 28, 2024 01:50 PM GMT
Report

வெங்கல்ராவ்

பிரபலமாக இருந்த போதும் பெரிய வருமானம் இல்லாமல் போனவர்களில் ஒருவர் நடிகர் வெங்கல்ராவ். வடிவேலுவுடன் பல காமெடி காட்சிகளில் நடித்துள்ள இவர், தலைநகரம் படத்தில் வந்த ரா ரா சராசகு ரா ரா காட்சி நல்ல அறிமுகத்தை பெற்றார்.

Actor Vengal Rao

அதே போல தலையில் இருந்து கை எடுத்தால், கடித்து விடுவேன், கந்தசாமி படத்தில் வந்த தேங்காய் காமெடி காட்சிகள் இன்றளவும் பிரபலமாகவே உள்ளது. வடிவேலு தொடர்ந்து நடித்து வந்த போது, நடித்து வந்த இவர் வடிவேலு சினிமாவில் இருந்து ஒதுங்கிய போது வேலை இன்றி போனார்.

பக்கவாதம் பாதிப்பு..கை கால் செயலிழப்பு - மாத்திரைக்கு கூட காசு இல்லாமல் கெஞ்சும் வெங்கல்ராவ்!!

பக்கவாதம் பாதிப்பு..கை கால் செயலிழப்பு - மாத்திரைக்கு கூட காசு இல்லாமல் கெஞ்சும் வெங்கல்ராவ்!!

உதவி 

தமிழ் திரையுலகமும் இவரை மறந்து போனது. பக்கவாதம் பாதிப்பு பெரிதாக படங்களில் தென்படாதவர் தற்போது மனதை நிகழ செய்யும் படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actor Vengal Rao 

அவரின் ஊரான விஜயவாடாவில் இருந்தபடியே அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதை தெரிவித்து உதவும் படி கோரிக்கை வைத்தார்.

Actor Vengal Rao vadivelu

வீடியோ வெளியான உடனே சிம்பு அவருக்கு 2 லட்ச ரூபாய் உதவி வழங்கினார். அவரை தொடர்ந்து தற்போது நடிகர் வடிவேலு அவருக்கு சுமார் 1 லட்ச ரூபாய் உதவியாக அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.