பக்கவாதம் பாதிப்பு..கை கால் செயலிழப்பு - மாத்திரைக்கு கூட காசு இல்லாமல் கெஞ்சும் வெங்கல்ராவ்!!
துணை நடிகர்கள் பலர் சினிமாவில் தங்களது வாழ்க்கையை செம்மைப்படுத்தி கொள்ளும் அளவிற்கு கூட சம்பாதிக்கவில்லை.
வெங்கல்ராவ்
அப்படி, பிரபலமாக இருந்த போதும் பெரிய வருமானம் இல்லாமல் போனவர்களில் ஒருவர் நடிகர் வெங்கல்ராவ். வடிவேலுவுடன் பல காமெடி காட்சிகளில் நடித்துள்ள இவர், தலைநகரம் படத்தில் வந்த ரா ரா சராசகு ரா ரா காட்சி நல்ல அறிமுகத்தை பெற்றார்.
அதே போல தலையில் இருந்து கை எடுத்தால், கடித்து விடுவேன், கந்தசாமி படத்தில் வந்த தேங்காய் காமெடி காட்சிகள் இன்றளவும் பிரபலமாகவே உள்ளது.
வடிவேலு தொடர்ந்து நடித்து வந்த போது, நடித்து வந்த இவர் வடிவேலு சினிமாவில் இருந்து ஒதுங்கிய போது வேலை இன்றி போனார். தமிழ் திரையுலகமும் இவரை மறந்து போனது.
பக்கவாதம்
பெரிதாக படங்களில் தென்படாதவர் தற்போது மனதை நிகழ செய்யும் படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் ஊரான விஜயவாடாவில் இருந்தபடியே அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழ் சினிமா நடிகர்களுக்கும் கலைஞர்களுக்கும் வணக்கம்.
நான் வெங்கல்ராவ் பேசுறேன். இப்போது பக்கவாததால் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.
ஒரு கை, ஒரு கால் செயலிழந்து படுத்த படுக்கையாகவே இருக்கிறேன். பழைய மாதிரி பேசக்கூட முடியவில்லை. மாத்திரை வாங்கக் கூட காசு இல்லை. யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் என பேசியுள்ளார்.

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் : சர்வதேச நீதி கோரும் விஜய் தணிகாசலம் IBC Tamil

சுனாமி பீதியில் விமானங்களை ரத்து செய்த ஜப்பானிய நிறுவனங்கள்! ரியோ தத்சுகியின் கணிப்பால் அச்சநிலை IBC Tamil

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
