சோறு போட்ட கடவுள்..அம்மா அப்பா'க்கு அடுத்து அவரு தான் - பிரபல நடிகர் குறித்து நெகிழ்ந்த வடிவேலு
நடிகர் வடிவேலு திரைத்துறையில் இன்னும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்.
வடிவேலு
தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களின் பட்டியலை எடுத்தால் அதில் சந்தேகமின்றி லெஜெண்ட்ஸ் வரிசையில் அமர்ந்திருப்பார் வடிவேலு. தனது உடல்மொழியாலும், காமெடி டைமிங்கிலும் பல தமிழகத்தையே கட்டி போட்டுள்ளார்.
இடையில் சில காலம் சினிமாவில் இல்லாமல் இருந்தவர், மாமன்ன படத்தில் தான் ஒரு சிறந்த காமெடி நடிகர் என்பதை தாண்டி ஒரு சிறந்த கலைஞன் என்பதை நிரூபித்து பலரின் பாராட்டுகளையும் வென்றார்.
தற்போது மீண்டும் திரைத்துறையில் தீவிரமாகியுள்ள வடிவேலு, மலையாள நடிகர் ஃபஹத் பாசில் நடிக்கும் தமிழ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அது காமெடி பாத்திரம் என்றும் கூறப்படுகிறது. வடிவேலுவுடன் நடித்த அநேக துணை நடிகர்கள் திரையில் ஜொலிக்கும் அவர், நிஜத்தில் அவ்வாறு இல்லை என்றே விமர்சிக்கிறார்கள்.
அந்த சூழலில் தற்போது சன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வடிவேலுவை வெங்கடேஷ் பட் நேர்காணல் செய்தார்.
எனக்கு சோறு போட்டு....
அதில் நடிகர் வடிவேலு மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியது வருமாறு, அப்போ கவுண்டமணி - செந்தில் இருக்குற நேரம் அது. எனக்கு வாழ்க்கை'ல சோறு போட்ட கடவுள் என்ன வாழ வைத்த தெய்வம் ராஜ்கிரண் தான்.
எங்க அம்மா - அப்பா'க்கு அப்புறம் ராஜ்கிரண் தான்.
அந்த ராஜ்கிரண் அவரோட ஆபுசுலயே எனக்கு சாப்பாடு போட்டு பெத்த புள்ள மாதிரி பாத்துக்கிட்டாரு. கவுண்டமணி செந்தில் இருக்கும் போது என்ன அவரு உள்ள விட்டாரு என நெகிழ்ச்சியாக பேசினார் வடிவேலு.