லவ் மேரேஜ் பண்ணா ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் கிராமம் - ஆர்டிஓ தீவிர விசாரணை
காதல் திருமணம் செய்த 9 குடும்பத்தினரை கிராமம் ஒன்று ஒதுக்கி வைத்துள்ளது.
காதல் திருமணம்
கோவை, ன்னூர் அருகே வடக்கலூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் காதல், சாதி மறுப்புத் திருமணம் செய்தால் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
அதில், “எங்கள் கிராமத்தில் காதல் திருமணம் செய்தால் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. நல்லது, கெட்டது உள்ளிட்ட குடும்ப சடங்குகளில் பங்கேற்பதற்கும் தடை விதித்துள்ளனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
16வயது சிறுவன் மீது 41வயது பெண்ணுக்கு காதல்; திருமணம் செய்து வைத்த மகனின் தாயார் - இறுதியில் ஏற்பட்ட சோகம்!
ஒதுக்கி வைக்கும் கிராமம்
அதன்படி கோவை வடக்கு ஆர்.டி.ஓ கோவிந்தன் விசாரணை நடத்துவதாக இருந்தது. இந்நிலையில் விசாரணையை வருகிற சனிக்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளனர். தற்போது இதுகுறித்து பேசியுள்ள கிராம மக்கள், “எங்கள் கிராமத்தில் இந்த முறை காலம் காலமாக தொடர்கிறது.
சுந்தரம் கோயில் நிர்வாக பொறுப்பில் இருந்தார். இதற்கு முன்பு இங்கு காதல் திருமணம் செய்தால், அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல், பஞ்சாயத்து செய்து பணம் வசூலிப்பது எல்லாமே சுந்தரம் செய்து கொண்டிருந்தார். அதுவே அவர் மகள் காதல் திருமணம் செய்தபோது அந்த முறையை பின்பற்றவில்லை.
ஊருக்கு ஒரு சட்டம், அவருக்கு ஒரு சட்டமாக என கேள்வி எழுப்பினோம். அந்த நேரத்தில் கோயில் வரவு, செலவு விவகாரத்திலும் பிரச்னை ஆனது. அதை மறைக்க சுந்தரம் இந்தப் பிரச்னையை கையில் எடுத்துள்ளார்.” எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.