வடசென்னை-2 குறித்து விளக்கமளித்தார் வெற்றிமாறன்

flim vetrimaaran Vada Chennai2
By Jon Mar 06, 2021 05:39 AM GMT
Report

வடசென்னை - 2 எப்போது உருவாகும் என்ற கேள்விக்கு இயக்குனர் வெற்றிமாறன் விளக்கமளித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற படம் வடசென்னை. இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகும் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியாகி மூன்று வருடங்கள் ஆகியும், அப்படம் குறித்த அடுத்தக்கட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதனால் வடசென்னை 2 உருவாகிறதா, இல்லையா என்கிற குழப்ப நிலை நீடித்து வந்தது. வெற்றிமாறன் இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், வடசென்னை 2-ம் பாகம் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து உருவாக வாய்ப்புள்ளதாக கூறினார்.

மேலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.