தமிழகத்தை உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை - தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

Crime Madras High Court Dharmapuri
By Sumathi Sep 29, 2023 05:53 AM GMT
Report

வாச்சாத்தி வழக்கில் தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வாச்சாத்தி வன்கொடுமை

தருமபுரி, வாச்சாத்தியில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டதாக கடந்த 1992ம் ஆண்டு ஜூன் 20ல் அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில்,

தமிழகத்தை உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை - தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்! | Vachathi Madras High Court Upheld The Conviction

215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதில் தண்டனை பெற்றவர்கள், தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

மேல்முறையீடு தள்ளுபடி

இந்நிலையில், தீர்ப்பை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ₹10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழகத்தை உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை - தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்! | Vachathi Madras High Court Upheld The Conviction

பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்திற்க்கு இழப்பீரு வழங்க வேண்டும்.. குற்றம் புரிந்தவர்களிடம் ₹5 லட்சம் வசூலிக்க வேண்டும். அப்போதைய எஸ்.பி, மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட அல்லது அவர்களது குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில், உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அதில், 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.