தளபதியின் பாடலுக்கு அசத்தல் நடனமாடிய இந்தியா கிரிக்கெட் வீராங்கனைகள்

cricket girls vijay song dance
By Jon Mar 11, 2021 05:42 AM GMT
Report

இந்தியா பெண்கள் கிரிக்கெட் வீராங்கனைகள் தளபதியின் மாஸ்டர் பட பாடலுக்கு நடனமாடிய காணொளி தற்போது வைரலாக பரவி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் இந்தாண்டு பொங்கல் விருந்தாக வெளியாகி பட்டையைக் கிளப்பியது. முன்னதாக இந்த படம் தயாராகி ஓராண்டுக்கு பிறகு வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. அந்த வகையில் கடந்த மாதம், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அஸ்வின், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர், இப்பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் நடனமாடியுள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றது. இதனை கொண்டாடும் விதமாக வேதா கிருஷ்ணமூர்த்தி, ஆகான்ஷா கோலி, திவ்யா, வனிதா மற்றும் மம்தா ஆகியோர் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய காணொளி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.