ஆசையாக ஐஸ்கிரீம் வாங்கிய பெண் - டாப்பை திறந்ததும் உள்ளே நெளிந்த பூரான்!!

Uttar Pradesh Ice Cream
By Karthick Jun 16, 2024 06:27 AM GMT
Report

ஐஸ்கிரீமில்....

உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் வசிக்கும் தீபா என்ற பெண், ஆன்லைன் டெலிவரி தளமான Blinkit மூலம் ஆர்டர் செய்த அமுல் ஐஸ்கிரீம் பெட்டியில் உறைந்த சென்டிபீட்(பூரான்) இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

uttarpradesh women finds centipede in icecream

தீபா தனது இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டார், இந்த பதிவு வைரலாகி பலரின் கவனத்தைப் பெற்றது. உணவுப் பொருட்களில் ஒரு பூரானை பெண் ஒருவர் கண்டுபிடித்ததை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பதிவு 

தீபா உடனடியாக பிளிங்கிட்டைத் தொடர்புகொண்டார், அவர் வாங்கிய தொகையைத் பெற்று கொண்டுள்ளார். அமுல் தரப்பின் பிரதிநிதி இந்த பிரச்சினையை தீர்ப்பார் என்று பிளிங்கிட் உறுதியளித்தபோது, ​​தீபா அமுல் நிறுவனத்திடமிருந்து தனக்கு எந்த தொடர்பும் வரவில்லை என்று கூறினார்.

ஆசையாய் வாங்கிய ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல்; அலறிய பெண் - அடுத்து நடந்தது என்ன?

ஆசையாய் வாங்கிய ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல்; அலறிய பெண் - அடுத்து நடந்தது என்ன?

தனது கவலையை வெளிப்படுத்திய அவர், விரைவில் தீர்வு எட்டப்படாவிட்டால், உள்ளூர் அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கான தனது விருப்பத்தை அவர் குறிப்பிட்டார்.

சமீபக்காலமாக இது போன்ற தொடர் செயல்கள் வெளிப்பட்டு வருகின்றது. அண்மையில், பெண் ஒருவர் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட விரல் இருந்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.