ஆசையாய் வாங்கிய ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல்; அலறிய பெண் - அடுத்து நடந்தது என்ன?

Mumbai Ice Cream Social Media
By Swetha Jun 13, 2024 07:21 AM GMT
Report

பெண் ஒருவர் வாங்கிய ஐஸ் கிரீமில் மனித விரல் இருந்தது அதிர்ச்சி அளித்துள்ளது.

ஐஸ் கிரீமில்..

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. அதேபோல மும்பையின் மலாத் பகுதியை சேர்ந்த ஒரு பெண் வெயிலின் தாக்கம் காரணமாக உடலையும் மனதையும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட முடிவு செய்தார்.

]

உடனே இந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்திருக்கிறார். வாங்கிய சில நேரத்தில் அதனை ருசிக்க காத்திருந்த பெண்ணுக்கு ககுளு குளு ஐஸ் கிரீம் டெலிவரி செய்யப்பட்டது. ஆசை ஆசையாய் வாங்கிய ஐஸ் க்ரீமை அந்த பெண் ருசித்து சாப்பிட துவங்கினார்.

சாக்லேட்டுக்குள் கிடந்த மனித விரல் - ஷாக்கான ஊழியர்!

சாக்லேட்டுக்குள் கிடந்த மனித விரல் - ஷாக்கான ஊழியர்!

மனித விரல்

சுவையில் மெய் மறந்துபோன பெண், தொடர்ந்து சாப்பிட்டு கொன்னு இருந்த போது நாக்கில் ஏதோ தட்டுப்பட்டது. அது என்னவாக இருக்கும் என உற்று நோக்கியவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தான் சாப்பிட்டு கொண்டு இருந்த ஐஸ் கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருந்ததுள்ளது.

ஆசையாய் வாங்கிய ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல்; அலறிய பெண் - அடுத்து நடந்தது என்ன? | Human Finger Is Found In Online Ordered Ice Cream

அதிர்ச்சியில் உறைந்துபோன துரிதமாக செயல்பட்டு ஐஸ் கிரீம் உருகுவதற்குள் அதனை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். உடனடியாக மலாத் காவல் நிலையம் விரைந்தார். அங்கு தான் ஆர்டர் செய்து சுவைத்த ஐஸ் கிரீமில் கைவிரல் இருந்தது குறித்து புகார் அளித்தார்.

புகாரை எடுத்துக்கொண்ட காவல் துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்தனர். விரல் இருந்த ஐஸ் கிரீமை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த மனித விரலையும் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.