பிறந்து 3 நாட்களே ஆன நாய் குட்டி..உயிரோடு எரித்து கொன்ற கொடூரம் - நடுங்க வைக்கும் பயங்கரம்!

Uttar Pradesh Crime Death Murder
By Vidhya Senthil Nov 10, 2024 06:03 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

பிறந்த 3நாட்களே ஆன நாய் குட்டிகளை உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாய் குட்டி

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர்களின் மனைவி சோபா மற்றும் ஆர்த்தி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் வீட்டருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நாய் ஒன்று 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த் குட்டிகள் இரவு பகல் பாராமல் கூச்சலிட்டுள்ளது.

uttarpradesh The burning of puppies alive

இதனால் சோபாவிற்கும், ஆர்த்திக்கும் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்த சுழலில் கடந்த 8ஆம் தேதி சம்பத்தன்று அன்று காலை சோபாவும், ஆர்த்தியும் சேர்ந்து நாய் குட்டிகளை கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, படுத்துறங்கிக்கொண்டிருந்த 5 நாய் குட்டிகளின் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர்.

5வது திருமணம் செய்ய போன மனைவி; பதறி ஓடிய கணவன் - இறுதியில் என்ன நடந்தது?

5வது திருமணம் செய்ய போன மனைவி; பதறி ஓடிய கணவன் - இறுதியில் என்ன நடந்தது?

எரித்து  கொலை

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விலங்குகள் பராமரிப்பு சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சோபா மற்றும் ஆர்த்தி மீது 325வது பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால், இருவரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

நாய் குட்டிகளை உயிரோடு எரித்து கொன்ற சம்பவம்

 இதனால் விலங்குகள் பராமரிப்பு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர் முன்னதாக நொய்டாவில் ஒரு சிறுவன் உயரமான கட்டடத்தில் இருந்து ஒரு மாத நாய் குட்டியை கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.