உத்தர பிரதேச ரயில் விபத்து; 12 பெட்டிகள் தடம் புரண்டது - உயரும் பலி எண்ணிக்கை
உத்தரபிரதேச மாநிலத்தில் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம்
சண்டிகரில் இருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் செல்லும் 15904 என்ற ரயில் எண் கொண்ட திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில், உத்தரபிரதேச மாநில கோண்டா மற்றும் ஜிலாஹி இடையே அமைந்துள்ள பிகௌராவில் இன்று(18.07.2024) மதியம் 1.45 மணி அளவில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 4 ஏசி பேட்டி உட்பட 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகளுக்காக 40 பேர் கொண்ட மருத்துவ குழுவும், 15 ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளது. மீட்புப்பணிகளை முடுக்கி விட அதிகாரிகளுக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
பலி
இந்த விபத்தில் தற்போது வரை 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
A few bogies of Dibrugarh Express have derailed near UP's Gonda railway station earlier today. Details awaited.pic.twitter.com/ioJNNaCde5
— Rajendra B. Aklekar (@rajtoday) July 18, 2024
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. ரயில்வே மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள உதவி எண் அறிவித்துள்ளது மாநில அரசு.