41 தொழிலாளர்களின் கதி என்ன? மீட்புக்கு 4 நாட்கள் ஆகுமாம் - அதிர்ச்சி தகவல்!
செங்குத்தாக துளையிடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீட்பு பணி
உத்தரகாண்ட், சில்க்யாராவில் சுரங்கம் தோண்டும் பணியின்போது ஏற்பட்ட மண் சரிவால், 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர். தொழிலாளர்களை மீட்க மேலிருந்து 86 மீட்டர் தூரம் வரை துளையிட வேண்டிய நிலையில்,
இதுவரை 19 மீட்டர் தூரம் துளையிடப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள 22 வயதான தொழிலாளி மஞ்சித், தனது தந்தையிடம் வாக்கி டாக்கி மூலம் பேசியதில்,
தொடரும் பரபரப்பு
அனைத்து தொழிலாளர்களும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை பத்திரமாக மீட்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கவும், தொடா்பு கொள்ளவும் 4 அங்குல அளவிலான குழாய் பயன்படுத்தப்பட்டது. தற்போது, செங்குத்தான வடிவில் துளையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான துளையிடும் பணி நடைபெற்று வருகிறது.
ஆனால், இந்த பணி நிறைவடைய 4 நாட்கள் வரை ஆகும் என தகவல் தெரிவிக்கின்றன. இத்தகவல் தொழிலாளர்களின் நிலை குறித்து கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.