திருப்பதியில் இருக்கு தங்க புதையல்.. சுரங்கம் தோண்டிய ஆசாமிகள் கைது !
திருப்பதி மலை பகுதியில் புதையல் எடுப்பதற்காக சுரங்கம் அமைக்க முயன்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் நாயுடு இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லூரில் இருந்து திருப்பதிக்கு குடிபெயர்ந்தார்.
திருப்பதியில் உள்ள எம்ஆர் பள்ளி பகுதியில் கூலி வேலை பார்த்து வந்த அவர். நெல்லூரில் தமக்கு தெரிந்த சாமியார் ஒருவர்திருப்பதி மலையில் 120 அடி சுரங்கத்தில் புதையல் இருப்பதாக கூறியுள்ளார்.
உடனே நாயுடு ஆறு கூலிகளை திருப்பதி சேஷாசலம் மலைக்கு அழைத்துச்சென்று கடந்த ஒரு வருடங்களாக 80 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு சேஷாசல மலைக்கு செல்வதற்காக காத்திருந்த நிலையில் திருப்பதி அலிபிரி காவல் நிலைய போலீசார் சந்தேகத்தின் பெயரில் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருப்பதி மலையில் புதையல் இருப்பதகாவும் அதற்காக சுரங்கம் தோண்டுவதும் தெரியவந்தது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதிர்ச்சியாகியுள்ளனர். காரணம் 80 அடி நீளத்திற்கு சுரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமான மூன்று பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணை நடத்தினர்.
அதில், இன்னும் 40 அடி சுரங்கம் தோண்ட திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பதி மலையில் சுரங்கம் தோண்டி புதையல் எடுக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.