ஹெலிகாப்டர் முன் செல்பி - இறக்கைகள் உடலை கிழித்து அதிகாரி பலி!

Uttarakhand Death
By Sumathi Apr 24, 2023 06:33 AM GMT
Report

அரசு அதிகாரி ஒருவர் ஹெலிகாப்டர் முன் செல்பி எடுக்க முயன்றபோது பரிதாபமாக பலியானார்.

செல்பி

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இங்கு இந்தியாவில் பல இடங்களில் இருந்து யாத்ரீகர்கள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். தற்போது அட்சய திருதியை முன்னிட்டு தார் சாம் யாத்திரை தொடங்கியுள்ளது.

ஹெலிகாப்டர் முன் செல்பி - இறக்கைகள் உடலை கிழித்து அதிகாரி பலி! | Uttarkhand Govt Official Died Hit Helicopter Blade

அதனால் அதிகமான யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளனர், இதுவரை மொத்தம் 16 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

அதிகாரி பலி

இந்நிலையில், அங்கு சிவில் விமான மேம்பாட்டு கழகத்தில் நிதிப்பிரிவில் நிதி கட்டுப்பாட்டாளர் பொறுப்பில் செயல்பட்டு வந்தவர் தான் ஜிதேந்திர குமார் சைனி. இவர் கேதர்நாத் தாம் பகுதியில் உள்ள ஹெலிபேடில் நின்று கொண்டிருந்தார்.

ஹெலிகாப்டர் முன் செல்பி - இறக்கைகள் உடலை கிழித்து அதிகாரி பலி! | Uttarkhand Govt Official Died Hit Helicopter Blade

அப்பொழுது அவர் அங்கு இயங்கி கொண்டிருந்த ஹெலிகாப்டர் முன் நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டரில் சுழன்று கொண்டிருந்த காத்தாடி அவர் உடலை கிழித்து எரிந்தது.

இதனால் அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.