ஒரு ஹெலிகாப்டர் இத்தனை கோடியா? - அசந்து போன கேரள மக்கள்
பிரபல முன்னணி தொழில் அதிபரும், லுலு நிறுவனத்தின் தலைவருமான எம்.ஏ.யூசுப் அலி 100 கோடி மதிப்பிலான அதி நவீன சொகுசு ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார்.
ஹெலிகாப்டரின் சிறப்பு
ஏர் பஸ் நிறுவனம் தயாரிக்கப்பட்ட H145 ரக ஹெலிகாப்டரில் 2 விமானிகள் உட்பட 7 பேர் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும்.

இந்த ஹெலிகாப்டர் கடல் மட்டத்தில் இருந்து 20 ஆயிரம் அடி உயரத்திலும் மணிக்கு 246 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.
ஹெலிகாப்டரில் லுலு நிறுவனத்தின் லோகோவும், யூசுப் அலியின் முதல் எழுத்தும் இடம்பெற்றுள்ளது. ஏர் பஸ் நிறுவனத்தின் H145 ரக ஹெலிகாப்டரை அண்மையில் ஆர் பி குழுமத்தின் தலைவர் ரவி பிள்ளை கடந்த மார்ச் மாதம் வாங்கி இருந்தார்.
இதன் மூலம் இந்த ஹெலிகாப்டரை வாங்கி முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த நிலையில் 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் எம்ஏ யூசுப் அலி.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan