பிச்சை எடுத்து வாழும் மூதாட்டி - கையில் குவியல் குயிலாக பணம்!
பிச்சை எடுத்து வாழும் மூதாட்டி ஒரு லட்சத்திற்கு மேல் சேர்த்து வைத்துள்ளார்.
பிச்சை எடுத்த மூதாட்டி
உத்தராகண்ட், ரூர்க்கி நகரில், கடந்த 10 ஆண்டுகள் மேலாக மூதாட்டி ஒருவர் சாலையோரம் பிச்சை எடுத்து வசித்து வந்துள்ளார்.

அந்த மூதாட்டி 12 ஆண்டுகளில் இரண்டு பைகள் முழுக்க நாணயங்கள், ரூபாய் நோட்டுகளைச் சேகரித்துள்ளார். மூதாட்டியின் இரண்டு பை முழுக்க நாணயங்கள் மற்றும் நோட்டுகள் இருந்ததைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
குவியலாக பணம்
பின் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பணத்தை எண்ண ஆரம்பித்துள்ளனர்.

அதில் இதுவரை ₹1 லட்சத்திற்கும் மேல் எண்ணப்பட்டதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த மூதாட்டியிடம் இருந்த பணத்தை வாங்கிய போலீசார், அதைப் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
மேலும், மூதாட்டிக்கு மருத்துவச் சிகிச்சை தரவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர்.