ஓட்டல் அறையில் பெண் மருத்துவர்; கையில் குறிப்புடன் கிடந்த சடலம் - சிக்கிய எஸ்ஐ
பாலியல் வன்கொடுமையால் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார்.
பாலியல் வன்கொடுமை
மகாராஷ்டிரா, சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். பால்டனில் உள்ள ஒரு விடுதி அறையில் இருந்து அவரது உடல்மீட்கப்பட்டது.

அப்போது அந்த பெண் மருத்துவரின் உள்ளங்கையில் தனது தற்கொலைக்கு காவல் உதவி ஆய்வாளர் கோபால் தான் காரணம் என்றும், அவர் தன்னை கடந்த 5 மாதங்களாக நான்கு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் எழுதி வைத்திருந்தார். மேலும், அவரது(பெண் மருத்துவர்) வீட்டின் உரிமையாளர் பிரசாந்த் பங்கர் தன்னை மன ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். தற்கொலை செய்து கொண்ட பெண் முன்னதாக பால்டன் துணை காவல் கண்காணிப்பாளரை (டிஎஸ்பி) சந்தித்து,
மருத்துவர் தற்கொலை
மூன்று போலீஸ் அதிகாரிகள் மீது புகார் அளித்திருந்தார். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால்தான் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டதாக மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் எம்.பி ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

தொடர்ந்து மகாராஷ்டிரா ரெசிடென்ட் டாக்டர்கள் சங்கத்தின் (MARD) மருத்துவர்கள், மும்பையில் உள்ள கே.இ.எம் மருத்துவமனையில் இன்று போராட்டங்களை நடத்தினர். மேலும், மாநிலம் முழுவதும் 8 ஆயிரம் மருத்துவர்கள் இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தங்கள் கைகளில் கருப்பு பட்டைகளை அணிந்திருந்தனர்.
இதுகுறித்து பேசிய தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவரின் சகோதரர், “என் சகோதரிக்கு நிறைய காவல்துறை மற்றும் அரசியல் அழுத்தம் இருந்தது. குறிப்பாக தவறான பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை வழங்க அழுத்தம் கொடுக்கப்பட்டது. என் சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.