தெய்வ குத்தம்; காவடி எடுத்து சுரங்கத்திற்குள் செல்ல முயற்சி - மிரண்ட அதிகாரிகள்!

Uttarakhand Accident
By Sumathi Nov 24, 2023 07:29 AM GMT
Report

சாமியை காவடி போல் எடுத்து வந்து சுரங்கத்திற்குள் போக சிலர் முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சுரங்க விபத்து 

உத்தரகாண்ட், உத்தர்காசி சில்க்கியாரா சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கி 12 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

uttarakhand-tunnel-collapse

சுரங்கம் அமைப்பதற்காக போடப்பட்ட இரும்பு வளையங்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் அங்கே மீட்பு பணிகளை செய்வது சிரமமாகியுள்ளது. என்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள் குழாய் வழியாக உள்ளே நுழைந்து, அவர்கள் தொழிலாளர்களை அடைந்ததும், ஸ்ட்ரெச்சர்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களை ஒவ்வொருவராக வெளியே அனுப்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கிய இறுதிகட்ட பணிகள்; 41 பேர், திக்திக் நிமிடங்கள் - இன்னும் 2 மணி நேரம்தான்!

நெருங்கிய இறுதிகட்ட பணிகள்; 41 பேர், திக்திக் நிமிடங்கள் - இன்னும் 2 மணி நேரம்தான்!

சாமிக்கு காவடி

இந்நிலையில், திடீரென சாமியை காவடி போல் எடுத்து வந்து சுரங்கத்திற்குள் போக சிலர் முயற்சி செய்தனர். அங்கே இருந்த கோவில் ஒன்றை இடித்துவிட்டு இங்கே சுரங்கம் அமைத்ததால் இந்தச் சம்பவம் நடந்ததாக நம்புகின்றனர். போலீசார் விடாமல் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

rescue-operation

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுரங்கப்பாதைக்கு வெளியே, 41 ஆம்புலன்ஸ்கள், தொழிலாளர்களை சின்னாலிசூரில் உள்ள ஒரு தற்காலிக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயாராக உள்ளன. இன்று இரவுக்குள் மீட்புப் பணிகள் நிறைவு பெறும் என்று மீட்புப் படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.