Friday, May 9, 2025

பயங்கர கலவரம்; ஊரடங்கு அமல் - 5 பேர் பலி, 300 பேர் படுகாயம்!

Uttarakhand Crime Death
By Sumathi a year ago
Report

உத்தராகண்ட் கலவரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

 வெடித்த கலவரம்

உத்தராகண்ட் ஹல்த்வானியில் சட்டவிரோத மதரஸா மற்றும் அதன் அருகிலுள்ள மசூதி நீதிமன்ற உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் குழுவினர் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

uttarakhand violence

இதையொட்டி, ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது ஹல்த்வானி, வான்புல்புரா பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு போலீஸாருக்கும், எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதிகாரிகள் மீது கல்வீச்சு நடந்தது.

இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பதிலடி கொடுத்தனர். காவல் நிலையத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறை அதிகரித்து நிலைமை மோசமானது. பெண்கள் உள்பட ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெடிக்கும் வன்முறை; வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு - 4 பேர் பலி, 250 பேர் படுகாயம்!

வெடிக்கும் வன்முறை; வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு - 4 பேர் பலி, 250 பேர் படுகாயம்!

5 பேர் பலி

அதில், 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 2 பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 300 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து பேசிய ஹல்துவானி ஆட்சியர் ரஞ்சனாசிங்,

பயங்கர கலவரம்; ஊரடங்கு அமல் - 5 பேர் பலி, 300 பேர் படுகாயம்! | Uttarakhand Riots 5 Killed 300 Injured

“நீதிமன்ற உத்தரவின் பேரில் முறையாக அனைவருக்கும் கால அவகாசத்துடன் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றங்கள் சென்ற சிலருக்கு தடை உத்தரவும் கிடைத்தது.

மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இன்றி அகற்றுகிறோம். மதரஸா விவகாரத்தில் திட்டமிட்டுகூடிய கும்பல், கலவரத்துக்கு காரணமாகி விட்டது. இவர்களில் அடையாளம் தெரியாத 5,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.