பெண் கடவுள்களை கவரணும்...பாஜக எம்.எல்.ஏ. மாணவர்களிடம் சர்ச்சை பேச்சு!

BJP Viral Video Uttarakhand
By Sumathi Oct 13, 2022 06:40 AM GMT
Report

இந்து மதத்தில் பெண் தெய்வங்கள் குறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. பன்ஷிதர் பகத் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பன்ஷிதர் பகத்

உத்தரகாண்டில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பன்ஷிதர் பகத் கலந்து கொண்டார். இந்த விழாவில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர்.

பெண் கடவுள்களை கவரணும்...பாஜக எம்.எல்.ஏ. மாணவர்களிடம் சர்ச்சை பேச்சு! | Uttarakhand Bjp Mla Banshidhar Bhagat Speech

அந்த நிகழ்ச்சியில் பன்ஷிதர் பகத் பேசுகையில், அறிவுக்கு சரஸ்வதி தேவியை மகிழ்விக்க வேண்டும், சக்தி மற்றும் வலிமைக்காக துர்கா தேவியை மகிழ்விக்க வேண்டும், செல்வம் மற்றும் வெற்றிக்கு ஒருவருக்கு லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் தேவை.

சர்ச்சை பேச்சு

ஆனால் இந்து மதத்தில் ஒரு ஆணுக்கு என்ன இருக்கிறது? நம்மிடம் ஒரு சிவ் ஜி (சிவன்) இருக்கிறார், அவர் மலையில் இருக்கிறார். மகாவிஷ்ணு ஆழ்கடலில் படுத்து இருக்கிறார். இந்து மதத்தில் நீண்ட காலத்துக்கு முன்பே பெண்களுக்கு அதிகாரம் நிலவி வருகிறது என தெரிவித்தார்.

இந்நிலையில் சர்வதேச பெண் குழந்தை தினம் குறித்த நிகழ்வில் பெண் கடவுள்களை கவர்ந்திழுக்குமாறு மாணவர்கள் மத்தியில் இவர் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, கண்டனங்களைப் பெற்று வருகிறது.