4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கும்பல்

pakistan womanattack
By Petchi Avudaiappan Dec 08, 2021 05:12 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

பாகிஸ்தானில் 4 பெண்களை நிர்வாணமாக்கி குச்சிகளால் அடித்து ஊர்வலமாக கூட்டிச் சென்ற கும்பல் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

பாகிஸ்தானில் சமீப காலங்களில் கும்பலாக சேர்ந்து கொண்டு மதத்தின் பெயரால் வன்முறைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. 

சமீபத்தில் சியால்கோட் நகரில் தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக கூறி இலங்கையைச் சேர்ந்த நபரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்து சாலையில் வைத்து எரித்த சம்பவம் சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஃபைசலாபாத் நகரில் உள்ள கடை வீதியில் 4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் அழைத்துச் சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் பதின்பருவத்தைச் சேர்ந்த பெண் உட்பட நான்கு பெண்களை ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி, குச்சிகளால் சிலர் அடித்தும் தர தரவென இழுத்தும் ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். இதுதொடர்பாக  பஞ்சாப் மாகாண போலீசார் இதில் தொடர்புடைய சிலரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அன்றைய தினம் பாவா சாக் மார்க்கெட்டுக்கு குப்பை பொருட்களை சேகரிக்க சென்றோம். மிகவும் தாகமாக இருந்ததால் உஸ்மான் எலக்ட்ரிக் கடைக்குள் சென்று தண்ணீர் கேட்டோம்.

ஆனால் தண்ணீர் கேட்ட எங்களை திருட வந்தவர்களாக நினைத்த அக்கடையின் உரிமையாளர்  சிலருடன் சேர்ந்து கொண்டு தாக்கினார். எங்களை குண்டுக்கட்டாக தூக்கி ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி, குச்சிகளால் அடித்து சாலைகளில் ஊர்வலமாக கூட்டிச் சென்றனர். அங்கிருந்த ஒருவர் கூட எங்களுக்கு உதவவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.