குற்றம் சாட்டி நடுரோட்டில் அழுத உ.பி. காவலர் - கட்டாய பணி விடுப்பில் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்
உணவின் தரம் குறித்து குற்றம் சாட்டி நடுரோட்டில் அழுத உ.பி. காவலர் கட்டாய பணி விடுப்பில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கண்ணீர் விட்டு அழுத காவலர்
சமீபத்தில் 12 மணி நேரம் வேலை செய்யும் எங்களுக்கு இந்த காய்ந்த ரொட்டி தான் உணவு என்று காவலர் ஒருவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில், உத்திர பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் மனோஜ் குமார் என்பவர் ஃபிரோசாபாத் தலைமையகத்தில், அரசாங்கம் எங்களை 12 மணி நேரம் வேலை செய்ய வைக்கிறது. இவ்வளவு அழுக்கு மற்றும் காய்ந்து போன, பழுதடைந்த உணவை எங்களுக்கு தருகிறார்கள்.
இது குறித்து பலதடவை நிர்வாகிகளிடம் தெரிவித்தும் எங்களுக்கு இந்த உணவையே கொடுக்கிறார்கள். இது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீரோடு, அழுதுக்கொண்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், காவலருக்கு ஆறுதல் தெரிவித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து கமெண்ட் செய்து வந்தனர்.

பணி விடுப்பு
இந்நிலையில், கதறி அழுத உ.பி. காவலர் மனோஜை, நீண்ட நாட்கள் கட்டாய பணி விடுப்பில் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மனோஜ்குமார் கூறுகையில், என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறி, பணியை விட்டு நீக்க, மூத்த காவல் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
UP Police constable Manoj Kumar posted at Firozabad headquarters telling his agony by crying.
— Mr.Haque (@faizulhaque95) August 10, 2022
He says the government makes us work for 12 hours and gives us such filthy and stale food. pic.twitter.com/5cNk7pGBvP