இந்த காய்ந்த ரொட்டி தான் எங்களுக்கு உணவு... நடுரோட்டில் கண்ணீர் விட்டு அழுத காவலர் - வைரல் வீடியோ

Viral Video
By Nandhini Aug 11, 2022 01:09 PM GMT
Report

12 மணி நேரம் வேலை செய்யும் எங்களுக்கு இந்த காய்ந்த ரொட்டி தான் உணவு என்று காவலர் ஒருவர் கண்ணீர் விட்டு அழும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கண்ணீர் விட்டு அழுத காவலர்

அந்த வீடியோவில், உத்திர பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் மனோஜ் குமார் என்பவர் ஃபிரோசாபாத் தலைமையகத்தில், அரசாங்கம் எங்களை 12 மணி நேரம் வேலை செய்ய வைக்கிறது.  இவ்வளவு அழுக்கு மற்றும் காய்ந்து போன, பழுதடைந்த உணவை எங்களுக்கு தருகிறார்கள். 

இது குறித்து பலதடவை நிர்வாகிகளிடம் தெரிவித்தும் எங்களுக்கு இந்த உணவையே கொடுக்கிறார்கள். இது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீரோடு, அழுதுக்கொண்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், காவலருக்கு ஆறுதல் தெரிவித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

viral video