Air Cooler'க்கு அக்கப்போர் - கல்யாணமே வேண்டாம் என தெறித்து ஓடிய மணப்பெண் - கைதான மாப்பிள்ளை
உத்தரபிரதேசத்தின் வினோதமான முறையில் திருமணம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.
திருமணம்
திருமணம் ஆயிரங்காலத்து பயிர். தேவலோகத்தில் நிர்ணயிக்கப்படுகிறது. இப்படியெல்லாம் பார்க்கப்டும் திருமணம் என்பது, சொற்ப விஷயங்களுக்கெல்லாம் நிறுத்தப்படுவதையும் நாம் கண்டுள்ளோம்.
விநோதத்தில் வினோதமாக உத்திரபிரதேசத்தில் திருமணம் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது, மண்டபத்தில் வரும் விருந்தினர்களுக்காக air - cooler வைக்கப்பட்டுள்ளது. சரி, அத கொஞ்சமா ஷேர் பண்ணி இருந்திருக்கலாம்.
Air cooler
என்ன நெனச்சங்களோ தெரியல அதுல இருந்தே கல்யாணத்திற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார்கள். இது பெரிய பிரச்சனையாக மாற, கல்யாணமே நின்றுவிட்டது.
காரணம், இது போலீஸ் கேஸாக மாற, அப்போது மணமகன் வீட்டாரின் போக்கை தனக்கு பிடிக்கவில்லை என கூறி, இந்த மாப்பிள்ளையே எனக்கு வேண்டாம் என கூறி சென்றுள்ளார் மணப்பெண்.
இந்த வழக்கில் மணமகன் ஹுக்கும் சந்த் ஜெய்ஸ்வால், அவரது உறவினர் பங்கஜ், மணமகளின் தந்தை நந்த் ஜி குப்தா மற்றும் அவரது சகோதரர் ராஜேஷ் குப்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.