கணவனுக்கு 3-வது திருமணம்..முன்னின்று நடத்தி வைக்கும் முதல் 2 மனைவிகள்!! இப்படி ஒரு காரணமா?

India Marriage
By Karthick Jun 30, 2024 11:20 AM GMT
Report

ஆந்திர மாநிலத்தில் தான் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.

திருமணம் 

பெண்கள் தங்கள் கணவனை இன்னொருவருடன் பங்கிட்டு கொள்வது பெரும்பாலும் நடந்திராத ஒன்றே. தன் கணவர் இன்னொரு பெண்ணை பார்த்தாலே, வீட்டுக்கு அழைத்து கொண்டு போய் பொளந்து எடுப்பதே வழக்கமாக கொண்டுள்ளனர் மனைவிகள்.

கணவனுக்கு 3-வது திருமணம்..முன்னின்று நடத்தி வைக்கும் முதல் 2 மனைவிகள்!! இப்படி ஒரு காரணமா? | 2Wives Arrange 3 Marriage For Husband Andhra News

முதல் திருமணம் விவகாரத்தில் முடிந்து 2-வது திருமணம் என்பது தற்போது சாதரணமாக மாறி விட்டது. அப்படி இருக்கும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் 2 மனைவிமார்கள் தங்க கணவருக்கு 3-வது திருமணத்தை செய்து வைக்க தயாராகி இருக்கிறார்கள்.

3-வது திருமணத்திற்கு 

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் அமைந்துள்ள பெடபயலு என்ற கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடக்கிறது. பர்வதம்மாவை என்பவருடன் திருமணமான நிலையில், குழந்தை இல்லாததால் அப்பலம்மாவை 2-வது திருமணம் செய்தார் பாண்டண்ணா என்பவர்.

3 வெள்ளி பெட்டி..உள்ளே தங்க விக்ரகங்கள் - அம்பானி மகன் திருமண அழைப்பிதழ் பாத்தீங்களா!

3 வெள்ளி பெட்டி..உள்ளே தங்க விக்ரகங்கள் - அம்பானி மகன் திருமண அழைப்பிதழ் பாத்தீங்களா!

முதல் மனைவியே உடன் இருந்துள்ளார். 2007ல் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது கணவர் இன்னொரு குழந்தை கேட்கும் நிலையில், மனைவிகள் இருவருமே சேர்ந்து கணவருக்கு 3-வது திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்துள்ளார்கள்.

2 wives arrange 3rd marriage for husband

அதே ஊரை சேர்ந்த லாவ்யா என்ற இளம் பெண்ணும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இதில் வினோதம் என்னவென்றால் திருமணத்திற்காக அச்சடிக்கப்பட்ட பத்திரிகையில் முதல் 2 மனைவிகள் புகைப்படமும் உள்ளது என்பது தான்.