3 வெள்ளி பெட்டி..உள்ளே தங்க விக்ரகங்கள் - அம்பானி மகன் திருமண அழைப்பிதழ் பாத்தீங்களா!

Mukesh Dhirubhai Ambani Anil Ambani Anant Ambani Nita Ambani
By Karthick Jun 27, 2024 07:40 AM GMT
Report

ஆனந்த் அம்பானியின் திருமணம் வரும் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அம்பானி திருமணம்

உலகின் பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கொண்டாட்டம் குறித்து செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.

Anant ambani Radhika Merchant

குஜராத்தின் ஜாம் நகரில் மிக பிரமாண்டமாக 3 நாள் கொண்டாட்டம் முடிவடைந்த நிலையில், தனியார் சொகுசு கப்பலை கொண்டு ஐரோப்பா கண்டத்தில் பாலிவுட் நட்சத்திரங்களுடன் 2-வது கொண்டாட்டம் நடந்து முடிந்துள்ளது.

அழைப்பிதழ் 

திருமண நாள் நெருங்கியுள்ள நிலையில் தற்போது, அவர்களின் திருமணம் பத்திரிகை வெளிவந்துள்ளது. இதுவும் ஒரு பிரமாண்டமே. பல இந்து கடவுள்களின் புகைப்படங்கள் மற்றும் பிரேம்களால் நிரப்பப்பட்ட கலாச்சார அடிப்படையில் இந்த அழைப்பிதழ் செய்ப்பட்டுள்ளது.

Anant ambani Radhika Merchant wedding invite

அழைப்பின் ஒரு வீடியோ சமீபத்தில் Instagram இல் பகிரப்பட்டது. முதலில் ஒரு கோவில் போன்ற பெட்டி உள்ளது. அதில் வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய கோவில் உள்ளே இருந்தது. பெட்டியைத் திறந்தவுடன் பின்னணியில் ஹிந்தி மந்திரங்கள் ஒலிக்கின்றன. பெட்டிக்குள் சில தங்க சிலைகளும் இருப்பதாகத் தெரிகிறது.

அடேங்கப்பா - ஒரு மெகந்திக்கு இவ்வளவா? அம்பானி திருமணத்தில் ஜாக்பாட் அடித்த பெண் !

அடேங்கப்பா - ஒரு மெகந்திக்கு இவ்வளவா? அம்பானி திருமணத்தில் ஜாக்பாட் அடித்த பெண் !

அதனை தொடர்ந்து ஒரு வெள்ளி அட்டை, ஒரு கோவிலின் பிரதான வாயில் போல் இருந்தது. திருமண விவரங்களுடன் கூடிய அட்டையில் கணேஷ், விஷ்ணு, லட்சுமி, ராதா-கிருஷ்ணா மற்றும் துர்கா உள்ளிட்ட பல இந்து தெய்வங்களின் படங்கள் இருந்தன.


அதனையடுத்து, மூன்றாவது அழைப்பிதழ் பெட்டி, மீண்டும் வெள்ளியில் அதன் சுற்றிலும் விஷ்ணு விக்கிரகம் இருந்தது. அந்தப் பெட்டியில் பல சிறிய எழுத்துக்களுடன் இந்துக் கடவுள்களின் சிலைகளும் சால்வையும் இருந்தன.