கரும்பு காட்டில் கொடூரம் - காதலியை 6 துண்டுகளாக வெட்டி வெறிச்செயல்!
காதலியை கொலை செய்து 6 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் காதலி
உத்தரப்பிரதேசம், அசங்கர் மாவட்டத்தைச் சேர்ண்டஹ்வர் பிரின்ஸ் யாதவ். இவர் இஷாக்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராதனா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆராதனா வேறொருவரை திருமணம் செய்துள்ளார்.
ஆனால், காதலனுடன் தொடர்பிலேயே இருந்து பேசி வந்துள்ளார். தொடர்ந்து இருவரும் பழகி வந்த நிலையில், தன்னை திருமணம் செய்யவில்லை எனும் ஆத்திரத்தில் பிரின்ஸ் காதலியை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி காதலியை கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதிர்ச்சி சம்பவம்
அப்போது தனது உறவினர் சர்வேசின் உதவியுடன் காதலியை அருகிலுள்ள கரும்பு தோட்டத்திற்குள் தூக்கிச் சென்றுள்ளார். அங்கு அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை 6 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பையில் அடைத்து கிணற்றில் வீசியுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீஸார் உடலை கைப்பற்றி, பிரின்ஸை கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி, கூரிய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனையடுத்து விசாரணைக்காக கொலை செய்த இடத்திற்கு அவரை அழைத்து சென்றிருக்கையில் போலீஸிடம் இருந்து தப்பிக்க தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார்.
இதில் போலீஸாரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பிரின்ஸ் உயிரிழந்தார். அதன்பின், இந்த சம்பவத்திற்கு பிரின்ஸ்கு உதவியாக இருந்த 7 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.