நிர்வாண படத்தை வெளியிட்ட காதலன் - திட்டமிட்டு கொடூரமாக கொலை செய்த காதலி...!

Attempted Murder
By Nandhini 2 வாரங்கள் முன்

காதலியின் நிர்வாண புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்ட காதலனை நண்பர்களுடன் சேர்ந்து காதலி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணை காதலித்து வந்த மருத்துவர் விகாஷ்

சென்னையை சேர்ந்த விகாஷ் என்பவர் உக்ரைன் நாட்டிற்கு சென்று டாக்டருக்கு படித்தார். இதனையடுத்து, சென்னையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பெங்களூருவுக்கு மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்காக விகாஷ் சென்றிருந்தார். பெங்களூருவில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் விகாஷ்.

இதற்கிடையில் கடந்த 9-ம் தேதி பெங்களூருவில் உள்ள காதலி வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த விகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் விகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

boyfriend-murder-girl-friend-arrest

கைதான காதலி

இது குறித்து பேகூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விகாசின் காதலியிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் காதலி, நான் விகாசை கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து காதலியை கைது செய்த போலீசார் அவரிடம் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் பல திடுக்கிடும் தகவலை காதலி வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தில், விகாசும், நானும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராக காதலித்தோம்.

எங்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதையடுத்து, எங்களுக்கு திருமணம் செய்து வைக்க  இரு குடும்பத்தினர் முடிவு செய்தாா்கள்.

கொலை செய்ய திட்டமிட்ட காதலி

இதற்கிடையில், என்னுடைய ஆபாச புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டார் விகாஷ். இது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான நான் இதுபற்றி தனது நண்பர்களான சுசீல், கவுதம், சூர்யாவிடம் கூறினேன். என் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட விகாஷை, என் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டினேன்.

சிறையில் அடைப்பு

இதற்காக கடந்த 9-ம் தேதி விகாசை, மைகோ லே-அவுட்டில் உள்ள என் வீட்டிற்கு வரவழைத்தேன். அங்கு வைத்து விகாசை என் நண்பர்கள் அடித்து தாக்கி கொலை செய்தனர் என்று வாக்குமூலத்தில் கூறினார். இதனையடுத்து, பிரதிஷாவின் நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபா நேற்று நிருபர்களிடம் பேசுகையில், கைதான 3 பேரையும் விசாரணைக்கு பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இக்கொலையில் தலைமறைவாக உள்ள சூர்யாவை போலீசார் தேடி வருகிறார்கள் என்றார்.