பாஜக பெரிதும் நம்பும் உத்திரபிரதேசம் - மீண்டும் கை கொடுக்குமா? காங்கிரஸ் முந்துமா?

Indian National Congress BJP Narendra Modi Uttar Pradesh Yogi Adityanath
By Karthick Apr 11, 2024 11:53 PM GMT
Report

நாட்டின் மிக பெரிய மாநிலமாக இருக்கும் உதிர்ப்பிரதேசத்தில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது பாஜக.

உத்திரபிரதேச அரசியல்

403 சட்டமன்ற தொகுதிகள், 80 மக்களவை தொகுதிகளுடன் நாட்டின் மிக பெரிய மாநிலமாக உள்ளது உத்தரபிரதேசம். அம்மாநிலத்தில் 200க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில், பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக் தள், அப்னா தள் போன்ற கட்சிகளே பெரும் ஆதிக்கத்தை செலுத்துகின்றன.

uttar-pradesh-lok-sabha-election-who-is-leading

குறிப்பாக அம்மாநிலத்தில் தான் பாஜக, பசு அரசியல் - இந்துத்துவ அரசியல் போன்றவற்றை கையாண்டு மக்களை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றது. அதே நேரத்தில், நீண்ட காலமாகவே பின்தங்கிய காங்கிரஸ் தற்போது சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

மாநில கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி கட்சிகளும் ஆளும் கட்சிகளாக இருந்து தற்போது எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றுள்ளது.

uttar-pradesh-lok-sabha-election-who-is-leading

பாஜகவின் யோகி ஆதித்யநாத்தின் வருகை அம்மாநிலத்தில் பெரும் அரசியல் நகர்வாக எழுதப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 78 தொகுதிகளை வென்ற பாஜக அதே உத்வேகத்தில் 2017-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 312 இடங்களை கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து மீண்டும் 2019-ஆம் ஆண்டு தேர்தலில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகின்றது பாஜக. மீண்டும் 78 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 62 தொகுதிகளை வென்றது. இம்முறையும் பெரும் வெற்றியை பெற பாஜக மும்முரம் காட்டி வருகின்றது.

பாஜகவிற்கு இடியாக விழுந்த கருத்துக்கணிப்பு முடிவுகள்...மத்தியில் மாறும் ஆட்சி..?

பாஜகவிற்கு இடியாக விழுந்த கருத்துக்கணிப்பு முடிவுகள்...மத்தியில் மாறும் ஆட்சி..?

முந்துவது யார்..?

மொத்தமுள்ள 80 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 74 தொகுதிகளிலும், அப்னா தள் (சோனிலால்) 2 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தள் 2 தொகுதிகளிலும், சுஹெல்தேவ் சமாஜ் மற்றும் நிஷாத் கட்சி போன்ற கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

uttar-pradesh-lok-sabha-election-who-is-leading

ஆளும் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் தற்போதும் பெரும் வாக்கு ஈர்ப்பாகவே அம்மாநிலத்தில் நீடிக்கிறார். அதே போல, இந்துத்துவ அரசியல் அம்மாநிலத்தில் பெரிய தாக்கத்தை கொண்டுள்ள நிலையில், ராமர் கோவில் அடுத்து பாஜக முன்னெடுத்துள்ள மதுரா கிருஷ்ணர் கோவில் போன்றவற்றை மீண்டும் அக்கட்சி முன்னிறுத்துகிறது.

இந்தியா கூட்டணியில் சார்பில் சமாஜ்வாதி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி அமைந்துள்ளதால் அம்மாநிலத்தில் அதிகளவில் இருக்கும் ஓ.பி.சி பிரிவினர் வாக்குகளும், முஸ்லிம் மற்றும் பாஜக எதிர்ப்பு வாக்குகளும் பெருமளவில் பிரியாது என்றே இந்த கூட்டணி நம்புகிறது.

uttar-pradesh-lok-sabha-election-who-is-leading

போட்டி இவ்விரு கூட்டணிக்கு இடையே தான் என்றாலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த பகுஜன் சமாஜ்வாதி கட்சியும் போட்டியில் உள்ளதை தவிர்த்து விட முடியாது. அக்கட்சி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

uttar-pradesh-lok-sabha-election-who-is-leading

தனித்து போட்டியிடும் பகுஜன் சமாஜ்வாதி தனது வாக்குவங்கியை மட்டுமே தக்கவைத்து கொள்ளும் என்றே நம்பப்படுகிறது. இருப்பினும் இது வரை வெளியாகியிருக்கும் கருத்துக்கணிப்புகள் பலவற்றில் பாஜகவே முந்துவதாக வெளியாகியுள்ளது.