பாஜகவிற்கு இடியாக விழுந்த கருத்துக்கணிப்பு முடிவுகள்...மத்தியில் மாறும் ஆட்சி..?
மஹாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் - உத்தவ் தாக்கரே சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஒன்றாக களம்காணுகிறது.
மஹாராஷ்ரா அரசியல்
நீண்ட காலமாக கூட்டணியில் இருந்த சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து கட்சியை நிறுவிய பால் தாக்கரே மகன் கையிலிருந்தே கட்சி ஏக்நாத் ஷிண்டேவிடம் சென்றது.
கூட்டணியில் இருந்த பாஜகவே தங்களுக்கு இந்த அநீதியை இழைத்துள்ளதாக ஆட்சி, கட்சி, சின்னம் போன்றவற்றை இழந்த உத்தவ் தாக்கரே குற்றசாட்டுக்களை வைத்து வருகின்றார்.
அதே போல, தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இரண்டாக உடைந்து ஷரத் பவார் அணி என உருவாக அஜித் பவார் கை ஓங்கியது. இவ்விரு கட்சிகளும் தங்களின் கட்சிக்கு ஏற்பட்ட இந்த தர்மசங்கடமான நிலைக்கு காரணமே பாஜக தான் அழுத்தமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பெருமளவில் அரசியல் செய்துவருகின்றன.
இந்த சூழலில் தான் உருவான இந்தியா கூட்டணியில் இவ்விரு கட்சிகளும் இணைந்தன. காங்கிரஸ் - உத்தவ் தாக்கரே சிவசேனா -தேசியவாத காங்கிரஸ் தற்போது கூட்டணியில் தொகுதி பங்கீடும் செய்து முடித்துள்ளது.
அதன்படி, மொத்தமுள்ள 48 இடங்களில் உத்தவ் தாக்கரே சிவசேனா 21, காங்கிரஸ் 17 மற்றும் 10 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் போட்டியிடுகின்றன.பாஜகவின் NDA கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடியாத நிலையில், பாஜக, சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (சுனில் தாக்கரே) ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா போன்ற கட்சிகள் உள்ளன.
சறுக்கும் பாஜக
வடஇந்தியாவில் பாஜக தங்களுக்கு வெற்றி குவியும் என எதிர்பார்க்கும் மாநிலங்களில் ஒன்று மகாராஷ்டிரா. ஆனால், தற்போது Lok Poll என்ற தனியார் செய்தி நிறுவனம் கருத்து கணிப்பு அக்கட்சிக்கு பெரும் மனஉளைச்சலை கொடுத்துள்ளது.
அந்த கருத்து கணிப்பில், தேசிய ஜனநாயக கூட்டணி(NDA ) சுமார் 21 - 24 தொகுதிகளை வெல்லும் என குறிப்பிட்டுள்ளது. அதே போல, இந்தியா கூட்டணி 23-36 இடங்கள் வரை கைப்பற்றும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி மட்டும் 9 - 12 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தனியாக 14 - 17 இடங்கள் வரை வெல்லும் என குறிப்பிடப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக அக்கூட்டணி இந்தியா கூட்டணியிடம் சற்று சறுக்கும் என்ற அக்கருத்துக்கணிப்பு குறிப்பிட்டுள்ளது.