இது வெள்ளம் அல்ல... வீட்டிற்கு வந்த 'கங்கை அன்னை' - குஷியில் காவல்துறை அதிகாரி
வெள்ள நீரை காவல்துறை அதிகாரி ஒருவர் கங்கை அன்னையாக வழிபட்டது கவனம் பெற்றுள்ளது.
பெருக்கெடுத்த வெள்ளம்
உத்தரப் பிரதேசம், பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை நதிகளின் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பல வீடுகள் மூழ்கியுள்ளன.
இதில் தாராகஞ்ச் பகுதியில் காவல் துறை துணை ஆய்வாளர் சந்திரதீப் நிஷாத், தனது வீட்டின் முன் ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்து, அதனை வெள்ளநீரில் ஊற்றி, பூக்களையும் தூவி கங்கைக்கு மரியாதை செலுத்தினார்.
வரவேற்ற அதிகாரி
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், , “கங்கை அன்னைக்கு ஜே!” என்று குரல் கொடுத்து, என்னை ஆசீர்வதிக்க என் வீட்டுக்கே நீ வந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம்” என்று கூறுகிறார்.
He is Man with positive attitude,
— Dr.Monika Langeh (@drmonika_langeh) August 3, 2025
SI Chandhradeep Nishad is internet sensation😁.
Maa Gange blessed him finally. pic.twitter.com/uGHpNepl4Y
மற்றொரு வீடியோவில், சீருடையில் இல்லாத நிஷாத், தன் வீட்டுக்குள் புகுந்த வெள்ளநீரில் மூழ்கி நீராடுவதும் பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழையால், 61-க்கும் மேற்பட்ட நகராட்சிப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,
339 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.