8 கணவர்கள்; எல்லாம் மேக்கப் - டீக்கடையில் சிக்கிய கல்யாண ராணி!

Maharashtra Marriage Crime
By Sumathi Aug 02, 2025 12:40 PM GMT
Report

எட்டு ஆண்களைத் திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 பேருடன் திருமணம்

மகாராஷ்டிரா, நாக்பூரில், எட்டு ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு லட்சக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்த பெண் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

சமீரா ஃபாத்திமா

முதற்கட்ட விசாரணையில், சமீரா ஃபாத்திமா என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக பல ஆண்களை, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த செல்வந்தர்கள் மற்றும் திருமணமாகிய ஆண்களை, அவர் குறிவைத்து ஏமாற்றியுள்ளார்.

கணவர் ஆண்மையில்லாதவர்; மனைவி குற்றச்சாட்டு - நீதிமன்றம் முக்கிய கருத்து

கணவர் ஆண்மையில்லாதவர்; மனைவி குற்றச்சாட்டு - நீதிமன்றம் முக்கிய கருத்து

சிக்கிய பெண்

அவரது கணவர்களில் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் ஒருவரிடமிருந்து ₹50 லட்சம், மற்றொருவரிடமிருந்து ₹15 லட்சம் என ரொக்கமாகவும் வங்கி பரிவர்த்தனைகள் மூலமாகவும் பணம் பறித்துள்ளார். இந்த மோசடிக்கு உதவியாக இணையதளங்கள் மற்றும் ஃபேஸ்புக்கை பயன்படுத்தியுள்ளார்.

8 கணவர்கள்; எல்லாம் மேக்கப் - டீக்கடையில் சிக்கிய கல்யாண ராணி! | Woman Marries Eight Men Arrested Nagpur

அதில், தான் ஒரு குழந்தை உள்ள, கணவனால் கைவிடப்பட்ட ஒரு நிராதரவான பெண் என கூறி ஏமாற்றியுள்ளார். இதற்கிடையில் தான் கர்ப்பமாக இருப்பதாக பொய் கூறி கைதாவதிலிருந்து தப்பித்துள்ளார்.

தற்போது ஒரு தேநீர் கடையில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.