காதலியுடன் உல்லாச வாழ்க்கை.. கர்ப்பிணி மனைவியை Walking அழைத்துச் சென்ற கணவர் - நள்ளிரவில் கொடூரம்!
நிறைமாத கர்ப்பிணி மனைவியை கணவர் வால்கிங் அழைத்துச் சென்று கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
கர்ப்பிணி மனைவி
உத்திரபிரதேசம் மாநிலம் லந்த்சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷால். இவருக்கும் ஹிமான்ஷி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஹிமான்ஷி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29, 2024 அன்று, இரவு தனது மனைவியை வால்கிங் செல்லலாம் என அழைத்துக் கொண்டு கூட்டிச்சென்றுள்ளார் விஷால். இதனையடுத்து சச்சுரா கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ஹிமான்ஷி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அவர் தண்ணீரில் அடித்துச் சென்றுள்ளார். அதன் பிறகு விஷால் ஹிமன்ஷியின் பெற்றோரிடம் கால் தவறி உயிரிழந்ததாகத் தெரிவித்தார். ஆனால் ஹிமன்ஷியின் தந்தை ரஞ்சித், அங்குள்ள காவல் நிலையத்தில் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கொலை
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹிமான்ஷியின் உடலைத் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று கால்வாயில் சிக்கி இருந்த ஹிமான்ஷி மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் விஷாலிடம் திவீர விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு முரணாகப் பதில் அளித்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விஷாலுக்குத் திருமணத்திற்கு முன்பா ஹேமா என்ற பெண்ணுடன் காதல் இருந்துள்ளார். இவர்களின் காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் விஷாலை வற்புறுத்தி ஹிமான்ஷியை திருமணம் செய்ய வைத்துள்ளனர்.
இதனையடுத்து விஷால் - ஹேமாஅவ்வப்போது தனிமையிலிருந்து வந்துள்ளது தெரியவந்தது. மேலும் காதலியுடன் வாழ நினைத்த விஷால், கர்ப்பிணி மனைவியைக் கொலை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து விஷாலைக் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
