14 வயது மாணவன் சித்திரவதை செய்து குத்திக்கொலை - அரசு பள்ளியில் அரங்கேறிய கொடூரம்!
அரசுப் பள்ளியில் 14 வயது மாணவனைக் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி
டெல்லி ஷஹர்பூரில் உள்ள ராஜ்கியா பால் வித்யாலயா அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படுத்து வந்துள்ளார் இஷூ. இந்த நிலையில், சம்பவத்தன்று மாணவன் இஷூ வழக்கம்போல் கூடுதல் வகுப்புகளை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அப்போது பள்ளி வாசலில் இஷூவுக்கும் மற்றொரு மாணவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது 3-4 பேர் கொண்ட மர்ப கும்பல் இஷுவை கத்தியால் சரமாரியாகக் கொலை செய்தனர்.
குத்திக் கொலை
இந்த சம்பவத்தில் இஷு ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மாணவர் இஷூ உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இந்த கொலை எதற்காகச் செய்யப்பட்டது என்பது குறித்து கைது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.