கூடுதல் நீதி வேண்டும்..!! டெல்லிக்கு புறப்படும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..?
வெள்ள நிவாரணத்திற்கு கூடுதல் நிதி வழங்கிட வலியுறுத்துவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ள நிவாரணம்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை மிக்ஜாங் புயலால் சந்தித்தது. மக்களின் இயல்வு வாழ்க்கை திரும்பினாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.6000/- வழங்கிட கூறி அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதே நேரத்தில் மத்திய குழுவும் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆய்வினை முடிவை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கவும் உள்ளது.
கூடுதல் நிவாரணம்
இந்நிலையில், தான் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளநிவாரண நிதியை தமிழகத்திற்கு கூடுதலாக வழங்கக்கோரி அவர் மனு அளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, வெள்ள நிவாரண நிதியாக முதற்கட்டமாக ₹561.29 கோடியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.