வெள்ள நிவாரணம் - எந்தெந்த வட்டங்களுக்கும்..யாரு யாருக்கு வழங்கப்படும்..? வெளியான அரசாணை
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நாளை முதல் 6 ஆயிரம் ரூபாய்க்கான டோக்கன் வழங்கப்பட இருக்கிறது.வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி முதல் டோக்கன்களை காண்பித்து 6 ஆயிரம் நிவாரண தொகையை பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் இது குறித்த அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
நிவாரணம்
சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அந்தந்த ரேஷன் கடைகளில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்வதன் மூலம் முறையான ஆய்வுக்கு பிறகு நிவாரண நிதியை பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
யாருக்கு இல்லை
தமிழ்நாடு அரசில் ஏ,பி ரக அரசுப்பணியாளர்களும்,வருமான வரி கட்டுபவர்களும் நிவாரண நிதியை பெற முடியாது.வருமான வரி கட்டுபவராக இருந்து பாதிப்பை சந்தித்திருந்தால் ரேஷன் கடைகளில் இருக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதன் மூலம் நிவாரண நிதி வாங்கலாம்.
எந்தெந்த பகுதிகள்
சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டத்திலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்,பல்லாவரம்,வண்டலூர் வட்டத்தில் முழுமையாகவும் திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களிலும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
அதே போல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் முழுமையாகவும்,ஸ்ரீபெரும்புதூரில் 3 வருவாய் கிராமங்களிலும் , திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி,கும்மிடிப்பூண்டி,ஆவடி உள்ளிட்ட 6 வட்டங்களிலும் நிவாரண தொகை வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.