குழந்தை இல்லையா; மகிழ்ச்சியான தகவல் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
பெண் ஒருவருக்கு கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை
இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் கருப்பை சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் தாய் ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது கருப்பை குழந்தையை சுமக்கும் அளவில் இல்லாமல் இருந்துள்ளது.
இந்நிலையில், அவரது அக்கா(40) 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார் எனவே, தங்கைக்கு தனது கர்ப்பபையை தானமாக வழங்க முன்வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் உட்பட 20 பேர் கொண்ட குழு ஒன்று, 17 மணி நேரமாக கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சையை செய்துள்ளனர்.
மருத்துவர்கள் சாதனை
மேலும் அதற்குப் பின் இரண்டு வாரங்களில் அவருக்கு மாதவிடாயும் வந்துள்ளது. இதன்மூலம், கர்ப்பப்பை சரியாக இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.
கர்ப்பப்பை புற்றுநோய் முதலான காரணங்களால் இளம் வயதிலேயே கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண்களும், இந்த அறுவை சிகிச்சை மூலம், கர்ப்பப்பை தானமாக பெற்று குழந்தை பெற்றுக்கொள்ளலாம். இந்தச் சம்பவம் பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.