கர்ப்பமான அப்பா - திருநங்கை மனைவியின் ஆசையை நிறைவேற்றிய நெகிழ்ச்சி சம்பவம்!
இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதி குழந்தையை பெற்றெடுக்க உள்ளனர்.
மூன்றாம் பாலின தம்பதி
கோழிக்கோடு உம்மலத்தூர் என்ற பகுதியை சேர்ந்த மூன்றாம் பாலின தம்பதி சஹத்- ஜியா. இதில் சஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறினார். அதேபோல ஜியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர். ஜியா ஒரு நடனக் கலைஞர். சஹத் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார்.
இருவரும் ஒரு குழந்தையை தத்தெடுக்க முயன்றுள்ளனர். இருப்பினும், இருவரும் மூன்றாம் பாலினத்தவராக இருந்ததால் சட்ட ரீதியாக அவர்களுக்கு பல சிக்கல்கள் எழுந்துள்ளன. அதன்பின் சஹத் ஆணாக மாறியிருந்தாலும் கூட அவரால் கருத்தரிக்க முடியும் என்பதை அறிந்து மருத்துவரை அணுகியுள்ளனர்.
கர்ப்பம்
பெண்ணாக மாறிய ஜியா மூலம் சஹத் கருவுற்றார். பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹாத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும், கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் இன்னும் அகற்றப்படாமல் இருந்தது. இதன் காரணமாகவே அவரால் கர்ப்பமாக முடிந்துள்ளது. இதனிடையே 8 மாத கர்ப்பத்தில் இருக்கும் சஹாத் ஜோடிபோட்டோஷூட் ஒன்றை நடத்தி வெளியிட்டுள்ளனர்.
அது தற்போது வைரலாகி வருகிறது. தன்னால் குழந்தை பெற முடியாது என்பதால் சஹத் குழந்தை பெறுவதாக ஜியா மகிழ்ச்சியடைந்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு, தாய் பால் வங்கியில் இருந்து தாய்ப்பாலை வாங்கி குழந்தைக்கு தரவும் முடிவு செய்துள்ளனர்.