39,000 பேர் பலி; போர் நிறுத்தம் எப்போது? இஸ்ரேலுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை!
போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேலுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளது.
போர் நிறுத்தம்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
போர் தொடங்கி 11 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை 39,000க்கும் அதிகமான காசா மக்கள் பலியாகியுள்ளனர். மேலும், 86,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர்.
அமெரிக்கா பேச்சுவார்த்தை
தொடர்ந்து அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்த முயற்சியில் ஈடுபட்டன. இதற்கிடையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொலை செய்தது.
இதனால் போர் பதற்றம் தீவிரமடைந்தது. ஹமாஸ் ஆதரவு நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியுள்ளன.
இந்நிலையில், மெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதன்மூலம் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை நடக்கும் எனத் தெரிகிறது.