இனி வாரத்தில் 4 நாட்கள்தான் வேலை - அசத்தல் திட்டத்துடன் களமிறங்கியுள்ள நாடு!
முதல் முறையாக வாரத்திற்கு 4 நாட்கள் வேலை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4 நாட்கள் வேலை
ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் 5 அரசாங்க அமைப்புகளில் வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை அறிவித்துள்ளதுடன், வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்பதையும் அறிமுகம் செய்துள்ளனர்.
இந்த திட்டம் முதல் முறையாக ஆகஸ்டு 12 முதல் செப்டம்பர் 30 வரையில் சோதனை முயற்சியாக முன்னெடுக்கப்படுகிறது. மேலும், 9 மணி வேலை நேரம் என்பதை 7 மணி நேரம் எனவும் குறைத்துள்ளனர்.
திட்டம் அறிமுகம்
தொடர்ந்து, இந்த திட்டமானது ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து மாகாணங்களிலும் அறிமுகம் செய்யும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய GCC நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.
கோடையில் இருந்து தப்பிக்க இந்த திட்டம் ஊழியர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
இதற்கிடையில், வாரத்தில் நான்கு நாட்கள் வேலை என்பது அனைத்து தொழில்களுக்கும், குறிப்பாக சுற்றுலா மற்றும் நிதிக்கு பயனளிக்காது என்ற விமர்சனங்களும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.