இப்படி பொய் செய்தி பரப்புவதா?வேதனை அளிக்கிறது- வில்லேஜ் குக்கிங் சேனல் பிரபலம் ஆதங்கம்!
வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியசாமி தாத்தா பயன்படுத்து ராகுல் காந்தி மீது பரவும் வதந்தியை அவர் மறுத்துள்ளார்.
பொய் செய்தி பரப்புவதா?
யூடியூபில் மிகவும் பிரபலமான வில்லேஜ் குக்கிங் சேனலின் பெரியசாமி தாத்தாவுக்கு அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உலகெங்கும் பல லட்ச subscriber -களை கொண்ட இந்த வில்லேஜ் குக்கிங் சேனலில் சமையல் வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்ற.
ஒரு குழுவாக செயல்பட்டு வரும் இவர்கள் அனைவரும் பிரபலமாகினர். அத்துடன் ராகுல் காந்தி கலந்து கொண்ட சமையல் வீடியோ வைரலானது. இந்த வீடியோ பல கோடி பார்வையாளர்களை தாண்டி உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.
யூட்யூப் பிரபலம் ஆதங்கம்
இந்த நிலையில், வில்லேஜ் குக்கிங் பெரியசாமி தாத்தாவுக்கு இதய நோய் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் ராகுல் காந்தியிடம் உதவி கேட்டதாகவும் ஆனால் ராகுல் காந்தி உதவி செய்ய மறுத்ததாகவும் தகவல் வெளியானது . ஆனால் இதை வில்லேஜ் குக்கிங் சேனல் சுப்பிரமணியன் வேலுசாமி மறுத்துள்ளார்.
இது குறித்து அவரது சமுக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இது முற்றிலும் பொய்! எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது! இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்! இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.