அந்த கேமரா இருக்குற ஒரே யூடியூப் டீம் இவங்க மட்டும்தான் - மிரண்ட லோகேஷ்!

Lokesh Kanagaraj
By Sumathi Oct 19, 2023 10:53 AM GMT
Report

வில்லேஜ் குக்கிங் சேனல் பயன்படுத்தும் கேமரா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வில்லேஜ் குக்கிங் 

பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர்கள் village cooking யூடியூப் சேனல் குழு. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி இவர்களுடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்ட வீடியோ படு வைரலானது.

அந்த கேமரா இருக்குற ஒரே யூடியூப் டீம் இவங்க மட்டும்தான் - மிரண்ட லோகேஷ்! | Village Cooking Channel Camera Details By Lokesh

தென்னிந்தியாவிலேயே 10 மில்லியன் பாலோவர்கள் பெற்ற முதல் சேனல் இதுதான். லோகேஷ் இயக்கத்தில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் இந்தக் குழுவினர் இடம்பெற்றிருந்தனர்.

இர்பான், மதன் கெளரி, TTF வாசன் சொத்து மதிப்பு என்ன? யூடியூபில் எவ்வளவுதான் சம்பாதிக்க முடியும்!

இர்பான், மதன் கெளரி, TTF வாசன் சொத்து மதிப்பு என்ன? யூடியூபில் எவ்வளவுதான் சம்பாதிக்க முடியும்!

ராஃப்டர் கேமரா

இந்நிலையில், லியோ படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில், வில்லேஜ் குக்கிங் டீம் வாழ்த்துக்களை தெரிவித்து தாங்கள் புதிதாக வாங்கிய RAPTOR கேமராவை காட்டினார்கள்.

village cooking

எனக்குத் தெரிந்து ரெட் ராஃப்டர் வகை கேமராவில் வீடியோ எடுக்கும் ஒரே youtuber நீங்கள் தான் இருக்கும் எனக் கூறியிருந்தார். உலக அளவில் பல கோடி பட்ஜெடிகளில் உருவாகும் படங்களை எல்லாம் இந்த ரெட் கேமராவில் தான் உருவாக்குகிறார்கள். தற்போது வில்லேஜ் குக்கிங் குழுவினர் வைத்திருக்கும் கேமராவின் வில்லேஜ் 34 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.