இந்த 20 நாடுகளுக்கு செல்ல வேண்டாம் - அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை!

United States of America North Korea Syria Yemen Russia
By Sumathi Jan 15, 2025 02:30 PM GMT
Report

20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

பாதுகாப்பு இல்லை

பல நாடுகளில் தீவிரவாதம், அமைதியின்மை, பொருளாதார குழப்பம் உள்ளிட்ட பிரச்னைகள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த 20 நாடுகளுக்கு செல்ல வேண்டாம் - அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை! | Usa Warn 20 Country Unrest Situation America Alert

சில நாடுகளில் பெண்கள் தனியே செல்வதற்கும் இரவில் செல்வதற்கும் பாதுகாப்பு இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் 20 நாடுகளுக்கு அமெரிக்க மக்கள் பயணிக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அந்த பட்டியலில் ரஷ்யா, லெபனான், சிரியா, சோமாலியா, ஏமன், வெனிசுலா, வடகொரியா, உக்ரைன், பெலாரஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்று உள்ளன. உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் இருக்கும் காரணங்களால் இந்த நாடுகளில் மக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும்.

மனித மாமிசத்தின் சுவை இப்படித்தான் இருக்கும் - பகீர் வீடியோ வெளியிட்ட நபர்

மனித மாமிசத்தின் சுவை இப்படித்தான் இருக்கும் - பகீர் வீடியோ வெளியிட்ட நபர்

அமெரிக்கா எச்சரிக்கை

பயணங்களை திட்டமிடும் முன்பாக, இணையதளம் மூலம் பயண விவரங்கள், அதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தி இருக்கிறது. உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் சிரியா உள்நாட்டு போர் காரணமாக அங்கு செல்ல வேண்டாம்.

இந்த 20 நாடுகளுக்கு செல்ல வேண்டாம் - அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை! | Usa Warn 20 Country Unrest Situation America Alert

சோமாலியா, லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல்கள் இருக்கிறது. பெலாரஸ் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் அரசியல் நெருக்கடிகள் உள்ளது.

வட கொரியாவில் வெளி நாட்டவர்களுக்கு கடுமையான சட்ட திட்டங்கள் இருக்கின்றன என்றும் அமெரிக்கா விளக்கம் தந்துள்ளது.